ஜோர்ஜ் டவுன்: உள்ளூர் நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பினாங்கின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பி டவர் கட்டிடம் பணியாளர்கள் மற்றும் பினாங்கு அனைத்துலக பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், 21 மாடி கட்டிடம் பிற்பகல் 2.10 மணியளவில் அதிர்ந்ததை அடுத்து வெளியேறியுள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர் முகமட் நோ ஐம்ரான் எலியாஸ், 28, செய்தியாளர்களிடம் கூறுகையில், 18 முதல் 21 என்பி கட்டிட மாடியில் உள்ள சில ஊழியர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறுகிறியதாகக் கூறினார்.
கட்டிடத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைத் தொடர்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
கட்டிடத்தை ஆய்வு செய்த பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அனைத்து ஊழியர்களையும் மதியம் 2.30 மணிக்கு வெளியேற உத்தரவிட்டனர்.
பின்னர் அவர்கள் மாலை 4 மணிக்கு மீண்டும் கட்டிடத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.