Home One Line P2 தைவான் : அதிபர் சாய் இங் வென் இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்றார்

தைவான் : அதிபர் சாய் இங் வென் இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்றார்

1136
0
SHARE
Ad
தைப்பே – தைவானின் நடப்பு அதிபர் சாய் இங் வென் (படம்) நேற்றி சனிக்கிழமை (ஜனவரி 11) நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது தவணைக்கு மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அடுத்த நான்காண்டுகளுக்கு அவரே தைவானின் அதிபராகத் தொடர்வார்.
63 வயதான அவர் ஜனநாயக முன்னேற்றக் கட்சி (Democratic Progressive Party) சார்பில் போட்டியிட்டு 8.17 மில்லியன் வாக்குகள் பெற்றார். இது மொத்த வாக்குகளில் 57 விழுக்காடாகும்.

தைவானுக்கான அதிபர் தேர்தல் 1996-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் வேளையில் நேற்றைய தேர்தலில் சாய் பெற்றதே இதுவரையிலான அதிக பட்ச எண்ணிக்கையிலான வாக்குகளாகும்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குவோமிந்தாங் கட்சியின் ஹான் குவோ யு 5.52 மில்லியன் வாக்குகள் மட்டுமே பெற்றார். இது மொத்த வாக்குகளில் 38 விழுக்காடாகும்.