கோலாலம்பூர்: பிரதமர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை முதல் முறையாக கல்வி அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
மதியம் 2.40 மணிக்கு டாக்டர் மகாதீரின் வருகையை கல்வி அமைச்சின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் முகமட் கசாலி அபாஸ் மற்றும் அமைச்சின் உயர் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
அனைவருடன் கைகுலுக்கி, அமைச்சின் 18-வது மாடிக்கு டாக்டர் மகாதீர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு, டாக்டர் மகாதீருக்கு முகமட் கசாலி விளக்கமளித்தார். துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் உடன் இணைந்திருந்தார்.
அமைச்சின் உயர் நிர்வாகத்துடன் ஒரு கலந்துரையாடலை டாக்டர் மகாதீர் நடத்தினார்.
கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் கல்வி அமைச்சராக ஜனவரி 3 முதல் பொறுப்பேற்க முடிவு செய்யப்பட்டது.