Home One Line P1 மருத்துவமனைகளில் உறிஞ்சு குழாய்க்கு பதிலாக செராய் பயன்படுத்துவதை சுகாதார அமைச்சு கட்டாயப்படுத்த தேவையில்லை!

மருத்துவமனைகளில் உறிஞ்சு குழாய்க்கு பதிலாக செராய் பயன்படுத்துவதை சுகாதார அமைச்சு கட்டாயப்படுத்த தேவையில்லை!

626
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் உறிஞ்சு குழாய்க்கு (ஸ்ட்ரோ) பதிலாக செராய் பயன்படுத்துவதை சுகாதார அமைச்சு கட்டயாப்படுத்த தேவையில்லை என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

இருப்பினும், அது சிக்கனமானது என்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் எண்ணினால், அதனை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுவதாக அமைச்சர் கூறினார்.

#TamilSchoolmychoice

இப்போதெல்லாம் உறிஞ்சு குழாய்களுக்கு பதிலாக பல விதமாக உள்ளன. சில சோளம் மற்றும் காகிதத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.”

“இருப்பினும், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் இது செலவைக் குறைப்பதாக கருதினால், இது நடைமுறைக்குரியதுஎன்று அவர் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த புதன்கிழமை, கெமுபு வேளாண் மேம்பாட்டு ஆணையத்தின் (காடா) தலைவர் செனட்டர் டத்தோ ஹுசாம் மூசா, உறிஞ்சு குழாய்க்கு பதிலாக, செராயை பயன்படுத்தி மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு விநியோகிக்கப் போவதாகக் கூறியிருந்தார்.