Home உலகம் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் காலமானார்

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் காலமானார்

560
0
SHARE
Ad

Margaret-Thatcherலண்டன், ஏப்ரல் 8 – பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் தனது 87வது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார்.

“இரும்புப் பெண்மணி” என வர்ணிக்கப்பட்ட மார்கரெட் தாட்சர்,  பிரிட்டனின் அரசியல், பொருளாதார சூழலை பெருமளவுக்கு மாற்றி சரித்திரத்தில் இடம் பிடித்தவர். 1979ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டுவரை பிரிட்டனின் பிரதமராகப் பணியாற்றினார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெண் பிரதமர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கன்சர்வேடிவ் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தியவர் அவர்.

#TamilSchoolmychoice

பாக்லாண்ட் தீவுகளுக்காக அர்ஜெண்டினா நாட்டுடன் போர் நடத்தியவர் மார்கரெட் தாட்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவருக்கு மார்க் தாட்சர் என்ற மகனும் கேரல் தாட்சர் என்ற மகளும் இருக்கின்றனர். இருவரும் விடுத்த கூட்டறிக்கையில் தங்களின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் அதைத் தொடர்ந்து அவர்  அமைதியான முறையில் மரணத்தைத் தழுவினார் என்றும் அறிவித்தனர்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தனது அனுதாபச் செய்தியில் ஒரு மாபெரும் பிரதமராகவும், மாபெரும் தலைவராகவும், மிகச் சிறந்த பிரிட்டிஷ் குடிமகளாகவும் திகழ்ந்த மார்கரெட் தாட்சரின் மரணத்தை அறிந்து சோகமடைந்தோம் என்று கூறியுள்ளார்.