Home One Line P1 “நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா? நான் கூறினேனா?”- துன் மகாதீர்

“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா? நான் கூறினேனா?”- துன் மகாதீர்

729
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சில தரப்பினர் கனவு காணுவது போல நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாக இருக்காது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

கூட்டணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தனிநபர்களும், மக்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய நன்மைகளை முன்னிலைப்படுத்த முடிந்தால் இது சாத்தியப்படாது என்று அவர் கூறினார்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தேசிய முன்னணி அரசாங்கம் விட்டுச்சென்ற பிரச்சனைகளை சுத்தம் செய்வதாகும். இதுவே நம்பிக்கைக் கூட்டணிக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், கடந்த ஐந்து இடைத்தேர்தல்களில் தோல்வியுற்றது, நம்பிக்கைக் கூட்டணி பொதுத் தேர்தலிலும் தோல்வி அடையும் என்பதற்கு அர்த்தமாகாது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக இருக்காது. ஆனால், எங்கள் முதல் பிரச்சனை என்னவென்றால், 1981-ஆம் ஆண்டைப் போலல்லாமல், முந்தைய அரசாங்கத்தால் இங்கு ஏற்படுத்தப்பட்ட சிக்கல்கள் நிறைய உள்ளன.”

அப்போது நான் முடிவெடுத்தேன், எல்லோரும் செயல்படுத்தினார்கள். இப்போது நாங்கள் நிர்வாகத்தை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.”

கடனை அடைப்பதற்கு நாம் பணம் சம்பாதிக்க வேண்டும். ஊழலில் கை தேர்ந்தவர்கள் கட்டயமாக விலகினார்கள், புதியவர்களுக்கு அந்த சாமர்த்தியம் இல்லை.”

இறுதியில், அவர்கள் செய்ததைப் பற்றிய கதையைச் சொல்வதில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு திறனில்லை.   நாங்கள் மூன்று முதல் நான்கு இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தோம், ஆனால், பொதுத் தேர்தலிலும் தோல்வி அடைவோம் என்று அர்த்தமல்ல. அது ராயட்டர்ஸ்ஸின் கருத்து” என்று பிரதமர் தெரிவித்தார்.