Home One Line P2 கொரொனாவைரஸ்: சீனாவில் 800-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 25 பேர் மரணம்!

கொரொனாவைரஸ்: சீனாவில் 800-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 25 பேர் மரணம்!

915
0
SHARE
Ad

பெய்ஜிங்: நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 23 ) நிலவரப்படி, புதிய கொரொனாவைரஸால் சுமார் 830 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) தெரிவித்துள்ளது.

இந்த கிருமி பாதித்திருப்பதாக சந்தேகிக்கப்படும் 1,072 வழக்குகளையும் அதிகாரிகள் பரிசோதித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

வுஹான் நகரில், ஹூபே மாகாணத்தின் தொடங்கிய இந்த வைரஸ் பின்னர் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது.

சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியா, தைவான், வியட்நாம் மற்றும் அமெரிக்காவிலும் இந்த கிருமி பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு நேற்று வியாழக்கிழமை இந்த பாதிப்பால் சீனாவில் அவசரநிலையை  அறிவித்தது. ஆனால், அனைத்துலக அளவில் இது இன்னும் மோசமடையாத நிலையில், அடுத்த கட்ட அறிக்கையை வெளியிடுவதை நிறுத்தியது.

11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹானில் உள்ளவர்களை, உள்ளூர் அரசாங்கம் நேற்று முதல் வெளிச்செல்வதை தடுத்தது. விமானங்கள் உட்பட பெரும்பாலான போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்தி வைத்ததோடு இல்லாமல், மக்கள் வெளியேற வேண்டாம் என்றும் கூறப்பட்டது.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, சுமார் 7 மில்லியன் மக்கள் வசிக்கும் அண்டை நகரான ஹுவாங்காங்கில் இதே போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.