Home One Line P2 கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 170-ஆக உயர்வு, உலகளாவிய அவசரநிலை அறிவிக்கப்படலாம்!

கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 170-ஆக உயர்வு, உலகளாவிய அவசரநிலை அறிவிக்கப்படலாம்!

895
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொரொனாவைரஸ் பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளன. மிக மோசமாக பாதிப்புக்குள்ளான மாகாணமான, ஹூபேயில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் சுமார் 7,711 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹூபேயில் 1,032 பேர் மேலும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

சார்ஸ் போன்ற வைரஸ் குறித்த அறிகுறி பரவலாக இருப்பதால், உடனடி நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு கடந்த புதன்கிழமை அனைத்து அரசாங்கங்களையும் எச்சரித்தது. நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் ஹூபேய் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

#TamilSchoolmychoice

சீனாவுக்கு அப்பால், மலேசியா உட்பட பல நாடுகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது. பின்லாந்து மற்றும் சவுதியில் நேற்று புதன்கிழமை இந்நோய் பதிவாகியுள்ளது.

உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று வியாழக்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்துகிறது