Home One Line P1 14 வுஹான் பயணிகளுக்கு ‘தரையிறங்க அனுமதியில்லை’ எனும் கடிதம் வழங்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்!- மொகிதின்

14 வுஹான் பயணிகளுக்கு ‘தரையிறங்க அனுமதியில்லை’ எனும் கடிதம் வழங்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்!- மொகிதின்

582
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: கடந்த செவ்வாயன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) தரையிறங்கிய பின்னர், வுஹானில் இருந்து மொத்தமாக 14 சீன நாட்டினர் மீண்டும் தங்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

அண்மையில் கொரொனாவைரஸ் பாதிப்புக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதை அரசாங்கம் தடை செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநுழைவுத் துறை மூலம் உள்துறை அமைச்சகம் அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும்தரையிறங்க அனுமதியில்லை’ எனும் எச்சரிக்கை கடிதத்தை வழங்கியது என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.

#TamilSchoolmychoice

குடிநுழைவுத் துறை அதிகாரிகளின் ஆவண சோதனையில், 14 பேரும் சீனாவின் வுஹானைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, குடிநுழைவுத் துறை அந்த நபர்கள் அனைவருக்கும்தரையிறங்க அனுமதியில்லை’ என்ற அறிவிப்பை வெளியிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பின்பு தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இது நிலையான இயக்க முறையின்படி அமல்படுத்தப்பட்டது.  வுஹான் மற்றும் ஹூபே பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சுற்றுப் பயணிகளும் எந்தவொரு எல்லைக் கடப்பிலிருந்தும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுஎன்று அவர் இன்று வியாழக்கிழமை புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் கூறினார்.