Home One Line P2 மேன் வெர்ஸஸ் வைல்ட்: தொகுப்பாளர் பியர் கிரில்ஸுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்!

மேன் வெர்ஸஸ் வைல்ட்: தொகுப்பாளர் பியர் கிரில்ஸுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்!

581
0
SHARE
Ad

சென்னை: டிஸ்கவரி தொலைக்காட்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் கடந்த புதன்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து படைத்திருக்கும்மேன் வெர்ஸஸ் வைல்ட்பாகத்தின் தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இதே போன்ற நிகழ்ச்சியை நடத்திய கிரில்ஸ், இந்தியாவில் இருந்து தனது நிகழ்ச்சியில் இடம்பெறும் இரண்டாவது நபராக ரஜினிகாந்த் இருப்பார் என்று கூறினார்.

இதனிடையே, தாம் இந்த நிகழ்ச்சியில் பங்குக் கொண்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தமது வாழ்க்கையில் இது மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ரஜினி கூறியதாவது:

“Thank you very much dear @BearGrylls for an unforgettable experience … love you. @DiscoveryIN thank you. #IntoTheWildWithBearGrylls,”

அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்பதை காண்பிக்கும் நிகழ்ச்சியான இதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஏற்கனவே பங்கு பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில், ரஜினியை வைத்து படப்பிடிப்பு நடந்தது