Home One Line P1 கொரொனாவைரஸ்: சீனாவிலிருந்து அழைத்து வரப்படும் மலேசியர்களுக்காக செயல்பாட்டு அறை ஜனவரி 31 முதல் இயங்கும்!

கொரொனாவைரஸ்: சீனாவிலிருந்து அழைத்து வரப்படும் மலேசியர்களுக்காக செயல்பாட்டு அறை ஜனவரி 31 முதல் இயங்கும்!

615
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்திலிருந்து வெளியேற்றப்படவிருக்கும் மலேசியர்களை தங்க வைப்பதற்கான செயல்பாட்டு அறை இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) இரவு  விஸ்மா புத்ராவில் செயல்படுத்தப்படும் என்று வட்டாரம் தெரிவித்ததாக டி ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அல்லது படிக்கும் மலேசியர்களை வெளியேற்ற அனுமதி பெற மலேசியா இன்னும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

விஸ்மா புத்ராவில் உள்ளஒப்ஸ் அறையை’ செயல்படுத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் இப்போதே வெளியேற்றப்படுவார்கள் என்று அர்த்தமல்ல, ஆனால், வெளியேற்றம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.”

#TamilSchoolmychoice

எனவே சீன அரசாங்கம் நமக்கு பச்சை விளக்கு கொடுக்கும் போது நாம் இங்கு தயாராக இருக்க வேண்டும்,” என்று அந்த வட்டாரம் கூறியது.

வுஹான் நகரம் உட்பட ஹூபே மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீன அரசு மூடிய பின்னர் தற்போது சுமார் 80 மலேசியர்கள் அப்பகுதிகளில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அனைத்து பயணத் திட்டங்களையும் சீனா முடக்கியுள்ளது.

ஒரு சில நாடுகள் ஏற்கனவே தங்கள் குடிமக்களை சீனாவிலிருந்து வெளியேற்றியுள்ளன.

தேசிய பேரிடர் துறை (நாட்மா) மலேசியர்களைசீனாவிலிருந்து கொண்டு வர தயார் நிலையில் இருப்பதாக வெளியுறவுஅமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் அப்துல்லா நேற்று குறிப்பிட்டிருந்தார்.