Home One Line P1 தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் மறைவு – பொன்.வேதமூர்த்தி இரங்கல்

தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் மறைவு – பொன்.வேதமூர்த்தி இரங்கல்

675
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தோபுவான் உமா சுந்தரி சம்பந்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“உமா சம்பந்தனின் சொல், செயல், வாழ்க்கை முறை என யாவற்றிலும் தேசிய உணர்வு, நாட்டுப் பற்று, மலேசிய சமுதாயத்தின் பன்முகப்பாங்கு யாவும் எந்த நேரமும் பிரதிபலிக்கும். உறுதியான மனத்திண்மை கொண்டிருந்த இந்த மூதாட்டி, திடகாத்திரமான சிந்தனையையும் செயல்பாட்டையும் கொண்டிருந்தார்” எனவும் வேதமூர்த்தி தனது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டினார்.

முன்னாள் ஒற்றுமைத் துறை அமைச்சரும் மஇகா தலைவருமான துன் வீ.திருஞான சம்பந்தனின் பொது வாழ்விலும் அரசியல் பயணத்திலும் துணைநின்று தோள்கொடுத்த அவரது துணைவியார் உமா சம்பந்தன் மறைவு பெரும் இழப்பாகும். அன்னாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நடப்பு ஒற்றுமைத் துறை அமைச்சரான பொன்.வேதமூர்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.