Home One Line P1 பெர்சாத்து: துன் மகாதீர் உட்பட 39 தொகுதித் தலைவர்கள் போட்டியின்றி தலைவர்களாக தேர்வு!

பெர்சாத்து: துன் மகாதீர் உட்பட 39 தொகுதித் தலைவர்கள் போட்டியின்றி தலைவர்களாக தேர்வு!

666
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 2016-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெர்சாத்து கட்சியின் முதல் தேர்தலில் அந்தந்த தொகுதியின் தலைவர்கள் போட்டியிடாமல் வெற்றி பெற்றுள்ளனர்.

கட்சித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட,  பத்து முக்கியத் தலைவர்களின் தொகுதியில் போட்டிகள் இல்லாமல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஷயத்தை அறிவித்த பெர்சாத்துவின் தேர்தல் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ சைட் ஹமிட் அல்பார், ஜனவரி 26-ஆம் தேதி, துன் மகாதீருக்கு எதிராக யாரும் வேட்பாளர் பாரத்தை சமர்ப்பிக்காத நிலையில், டாக்டர் மகாதீர் லங்காவி தொகுதியின் தலைவராக நீடிப்பார் என்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

டான்ஸ்ரீ மொகிதின் யாசின் (பாகோ), துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் துன் மகாதீர் (ஜெர்லுன்), பொதுச் செயலாளர் டத்தோ மார்சுகி யஹ்யா (பாகான்) மற்றும் பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் (முவார்) ஆகியோர் போட்டியில்லாமல் தலைவர்களாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில், 39 தொகுதித் தலைவர்கள் போட்டியின்றி வென்றனர்,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை பெர்சாத்து கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.