Home One Line P1 கொரொனாவைரஸுக்கும், இனத்திற்கும் என்ன சம்பந்தம்?”- சைபுடின் அப்துல்லா

கொரொனாவைரஸுக்கும், இனத்திற்கும் என்ன சம்பந்தம்?”- சைபுடின் அப்துல்லா

675
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் புத்ராஜெயா மேற்கொண்ட முயற்சிகளை மலேசியர்கள் இனப்பிரச்சனையாக பார்க்க வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.

இன்று, நாம் கொரொனாவைரஸ் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கும்போது, ​​இனப்பிரச்சினைகளை இதனுள்ளே திணிக்க முயற்சிக்கும் நபர்கள் உள்ளனர். கொரொனாவைரஸ்கள் சீனாவிலிருந்து வந்தவை. ஆப்பிரிக்காவிலிருந்து எபோலா வந்ததைப் போல, பிற கண்டங்களிலிருந்து பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டன, அப்போதெல்லாம் ஒருபோதும் இனப்பிரச்சினைகள் எழவில்லை.”

#TamilSchoolmychoice

அதனால்தான் மலேசியர்களாகிய நாம் இந்த இனப் பிரச்சனையைத் தடுக்க முடியும் என்று நம்புகிறேன், ஆனால், நான் முன்பு விளக்கியது போல் இது இன அரசியலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது, இதனை நிறுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பழைய அரசாங்கத்திடமிருந்து நம்பிக்கைக் கூட்டணி பெறப்பட்ட இந்த இன அரசியல் நிகழ்வையும் சைபுடின் விவரித்தார். இது சிக்கலான பிரச்சனைகளை மறைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இது (இன அரசியல்) சமூகத்தில் உள்வாங்கியுள்ளது, அவர்களில் சிலர் அதை உணரவில்லை, மற்றவர்கள் அதை ஒரு பொதுவான மற்றும் மலேசியாவின் போக்காகப் பார்க்கிறார்கள்.”

சிலர் இதை சரியான வழியாகவே பார்க்கிறார்கள். மற்றவர்கள் இன அரசியலைப் பயன்படுத்திக் கொண்டு அதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.”

நம்பிக்கைக் கூட்டணியில் நாங்கள் அதைத் தடுக்க விரும்புகிறோம். ஆனால் அது எளிதானது அல்ல. ஏனெனில் நாங்கள் அதைச் சமாளிக்க முயற்சி செய்யும்போது, எங்களை ஒரு பிரச்சனையாக கருதுகிறார்கள்” என்று சைபுடின் வருத்தத்துடன் தெரிவித்தார்.