கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று நோய் காரணமாக உலகளாவிய சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததை அடுத்து, கொரொனாவைரஸ் தொற்று குறித்த சுகாதாரக் குழு, சீன சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்குள் நுழைவதை மேலும் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆராயும்படி உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
மேலும், வுஹான் மற்றும் ஹூபேயில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே தற்போதுள்ள வருகை கட்டுப்பாடுகளின் நிலையை அரசாங்கம் பராமரிக்கும் என்று அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.
“நோய் தொடர்பான குழுவும், சுகாதார அமைச்சும் இந்த விவகாரம் குறித்து ஆராய முடியும் என்று நினைக்கிறோம். அவ்வாறு செய்வதற்கு அவர்கள் (குழு) ஒப்புதல் வழங்கினால், அரசாங்கம், அமைச்சரவையில் பேசியப் பிறகு நாங்கள் அதை செய்வோம்.”
“இதற்கிடையில், நாங்கள் வுஹான் மற்றும் ஹூபேயில் இருந்து மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியுள்ளோம்” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மலேசியாவில், இதுவரை எட்டு பேர் இந்த நோய் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சீன குடிமக்கள்.