Home One Line P1 “கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டும்!”- அன்வார்

“கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டும்!”- அன்வார்

694
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பிப்பது மற்றும் கற்பது (பிபிஎஸ்எம்ஐ) குறித்த பரிந்துரையை அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை, கணிதமும், அறிவியலும் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் என்று இடைக்கால கல்வி அமைச்சரான பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து விரிவாக கருத்து தெரிவிக்க அன்வார் மறுத்து விட்டார். இந்த விவகாரம் அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அவர்கள் அதை அமைச்சரவையில் விவாதிக்கட்டும்என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதற்கிடையில், எதிர்காலத்தில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் பிகேஆர் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கும் என்று பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

துன் (டாக்டர் மகாதீர்) இது குறித்து இப்போதுதான் குறிப்பிட்டுள்ளார், எங்களால் அதைப் பற்றி விவாதிக்க முடியாது.”

2009-இல் பிபிஎஸ்எம்ஐ செயல்படுத்தப்படுவதை பிகேஆர் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.