பெய்ஜிங்: கொரொனாவைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வுஹான் நகர அமலாக்கத் துறை ஆறு நாட்களில் 1,000 படுக்கைகளுடன் புதிய மருத்துவமனையை வெற்றிகரமாக அமைத்துள்ளனர்.
வுஹான் மேயர் ஜாவ் சியான்வாங் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஹூஷென்ஷான் என்று பெயரிடப்பட்ட அந்த மருத்துவமனையை சீன இராணுவத்திடம் ஒப்படைத்தார் என்று சிசிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1,400 இராணுவ மருத்துவ பணியாளர்கள் இன்று திங்கட்கிழமை மருத்துவமனையில் பணியைத் தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 23-ஆம் தேதி, சீன நாட்டில் கொரொனாவைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து இரண்டு புதிய நிமோனியா மருத்துவமனைகளை உருவாக்க நாட்டின் அமலாக்கத் துறை திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த வைரஸ் பிரச்சனைக்கு தீர்வு காண சீன அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு நிரூபிக்க இரு மருத்துவமனைகளின் கட்டுமானமும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதற்கிடையில், மற்றொரு மருத்துவமனை, லீஷென்ஷென் மருத்துவமனை கட்டுமானத்தில் இருப்பதாக கூறப்படுகிறது, இது புதன்கிழமைக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ வசதிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய லீஷென்ஷென் மருத்துவமனையில் 1,600 நோயாளி படுக்கைகள் பொருத்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.