Home One Line P1 கொரொனாவைரஸ்: உலகளவில் மரண எண்ணிக்கை 426-ஆக உயர்வு, ஒரே நாளில் 64 பேர் மரணம்!

கொரொனாவைரஸ்: உலகளவில் மரண எண்ணிக்கை 426-ஆக உயர்வு, ஒரே நாளில் 64 பேர் மரணம்!

657
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொரொனாவைரஸ் காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 426-ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக 64 இறப்புகள் மற்றும் 3,235 புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் சீனாவில் பதிவாகி இருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

கூடுதல் மரணங்கள் அனைத்தும் ஹூபேயில் நடந்ததாக அது குறிப்பிட்டுள்ளது. மொத்தமாக அந்நாட்டில் 425 இறப்புகள் பதிவாகி உள்ள நிலையில்,  20,438 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் மற்றொரு இறப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து உலகளவில் மரண எண்ணிக்கை  426-ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

சீனா தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகளையும், பயணத் தடைகளையும் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 56 மில்லியன் மக்கள், குறிப்பாக சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களில், கொண்டாட முடியாமல் போனது.