Home One Line P1 வுஹானிலிருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்!- சுகாதார அமைச்சு

வுஹானிலிருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்!- சுகாதார அமைச்சு

640
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வுஹானில் இருந்து திரும்பும் மலேசியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் கொரொனாவைரஸ்  பாதிப்பிலிருந்து உண்மையிலேயே விடுபட்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவே இது செயல்படுத்தப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

அங்கிருந்து திரும்பும் பயணிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையக் கட்டிடத்திற்குள் நுழைய மாட்டார்கள் என்றும், அதற்கு பதிலாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு வரப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அவர்களது குடும்பங்கள் அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

வுஹானில் இருந்து மலேசியர்களை திரும்ப அழைத்து வரும் விமானம் கெஎல்ஐஏவில் தரையிறங்கும். இருப்பினும், அனைத்து பயணிகளும் முனைய கட்டிடத்திற்குள் நுழைய மாட்டார்கள். அவர்கள் விமானத்திலிருந்து இறங்கி சிறப்பு பேருந்துகளில் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் தூய்மைப்படுத்தும் செயல்முறை மற்றும் நுழைவுத் திரையிடலுக்காக விமான அவசரப் பிரிவு (ஏடியூ) கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.”

இது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் நடத்தப்படும்.”

நோய்க்கான கிருமி அறிகுறிகள் இருப்பதைக் கண்டறிந்தவர்கள் சுங்கை புலோ மருத்துவமனை அல்லது கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.”

அறிகுறிகள் இல்லாதவர்கள் ஒரு கண்காணிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். ”என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வுஹானுக்கான விமானம் இன்று திங்கள்கிழமை (பிப்ரவரி 3) மாலை மலேசியாவிலிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) அதிகாலை விமானம் சீனாவிலிருந்து புறப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.