Home One Line P1 “42 மில்லியனை என் வங்கிக் கணக்கிற்குள் செலுத்த நான் யாரையும் அறிவுறுத்தவில்லை!”- நஜிப்

“42 மில்லியனை என் வங்கிக் கணக்கிற்குள் செலுத்த நான் யாரையும் அறிவுறுத்தவில்லை!”- நஜிப்

456
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட்டின் 42 மில்லியன் ரிங்கிட்டை தனது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறு யாருக்கும் தாம் அறிவுறுத்தியதில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் சத்தியம் செய்தார்.

இதைச் செய்ய நான் ஒருபோதும் யாருக்கும் அறிவுறுத்தியதில்லை,” என்று அவர் இன்று திங்களன்று கூறினார்.

பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் நிக் பைசாலுக்கு ஒருபோதும் அவ்வாறு செய்ய அறிவுறுத்தவில்லை என்று கூறினார்.

#TamilSchoolmychoice

நான் அத்தகைய அறிவுறுத்தலை வழங்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை, எந்த சாட்சியும் அவ்வாறு கூற முன்வரவில்லை,” என்று அவர் கூறினார்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பாக நஜிப் ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.