ஜோர்ஜ் டவுன்: வடக்கு மலேசியாவில் இந்து கோவில்கள் மற்றும் அரசாங்கம் சார்பற்ற அமைப்புகளின் தொடர்புகளைக் கொண்ட இந்து மத கையேட்டை பினாங்கு மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கையேட்டின் மூலமாக உணவு, கல்வி, மருத்துவ சேவைகள் மற்றும் பலவற்றை இலவசமாகப் பெறலாம்.
பினாங்கு இந்து சங்கம் (பிஎச்ஏ), பினாங்கு இந்து அறவாரியம் (பிஎச்இபி), உலகளாவிய இந்து கூட்டமைப்பு மற்றும் பிற அரசாங்க சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன், சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி இக்கையேடுகளின் 10,000 பிரதிகளை வெளியிட்டிருந்தார்.
இதுவருகிற பிப்ரவரி 7 மற்றும் 8 தேதிகளில் தைப்பூசத்தின் போது பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள தண்ணீர் பந்தலில் விநியோகிக்கப்படும்.
இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரசாந்த் சுப்பிரமணியன் கூறுகையில், அனைத்து சமூகங்களுக்கும், குறிப்பாக ஏழை மற்றும் பி40 பிரிவு குடும்பங்களுக்கும், இந்து கோவில்கள் மற்றும் அரசாங்க சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் வழங்கும் இலவச சேவைகள் குறித்த தகவல்களை தெரிவிப்பதற்காக இந்த முயற்சி அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
வழங்கப்பட இருக்கும் மக்கள் இலவச சேவைகளைப் பற்றியும், இந்து கோவில்கள் மற்றும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களுக்கான இடம், செயல்பாட்டு நேரம் மற்றும் தொடர்பு விவரங்கள் குறித்தும் தேவைப்படும் மையப்படுத்தப்பட்ட அடைவு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
“இந்த சேவைகளில் இலவச உணவு, இலவச கல்வி வகுப்புகள் மற்றும் இலவச மருத்துவ உதவி கூட இந்து சமூகங்களுக்கு மட்டுமல்ல, அகதிகள், இந்திய–முஸ்லிம்கள், சீனர்களுக்கும் வழங்குகிறோம். எல்லோரும் இந்த சேவைகளைப் பெற முடியும்” என்றுஅவர்செய்தியாளர்களிடம்குறிப்பிட்டார்.
பினாங்கு, கெடா மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த சுமார் 15 கோயில்கள் மற்றும் அரசாங்க சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் முதலில் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மலேசியா முழுவதும் தீவிரமாக இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் இது தொடர்பாக அணுகலாம் என்றும் அவர் கூறினார்.