பெய்ஜிங்: கொரொனாவைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா உதவி வழங்குவதை விட, உலக மக்களுக்கு அச்சத்தை உருவாக்குவதும், பரப்புவதும் வேலையாக வைத்திருக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களில் சிலரை திரும்பப் பெற முன்மொழியப்பட்ட முதல் நாடு அமெரிக்கா என்று அவ்வமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறினார்.
அது செய்தது மக்களிடையே அச்சத்தை மட்டுமே பரப்ப முடியும் என்றும் அது ஒரு மோசமான உதாரணம் என்றும் அவர் கூறினார்.
இதன் விளைவாக, மற்ற நாடுகள் அறிவியலின் அடிப்படையில் இந்த விவகாரத்தை தீர்வுக் காண இணங்க வேண்டும் என்று சீனா நம்புகிறது என்று ஹுவா கூறினார்.
கடந்த ஜனவரி 28-ஆம் தேதியன்று, அமெரிக்கா தனது மக்களை வுஹான் நகரத்திலிருந்து வெளியேற்றியது.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, சீனாவில் 20,438 பேர் இந்த கிருமியால் பாதிக்கப்பட்ட நிலையில், 427 இறப்புகள் பதிவாகியுள்ளது.