Home One Line P2 நடிகர் விஜய் வருமானவரித் துறை சோதனை – 240 மில்லியன் ரூபாய் பறிமுதல்

நடிகர் விஜய் வருமானவரித் துறை சோதனை – 240 மில்லியன் ரூபாய் பறிமுதல்

1266
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) – நடிகர் விஜய், அவர் நடித்த “பிகில்” படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அந்தப் படத்தின் தயாரிப்புக்கு நிதிஉதவி அளித்த கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இந்திய வருமானவரித் துறை நடத்திய அதிரடி சோதனைகளில் இதுவரையில் 240 மில்லியன் ரூபாய் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் விஜய் தற்போது “மாஸ்டர்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலியில் கலந்து கொண்டு வருகிறார். அங்கு சென்று விசாரணை நடத்திய இந்திய வருமானவரித் துறையினர் அதைத் தொடர்ந்து சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

மேலும் விஜய் நடித்த பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களிலும், அந்தப் படத்தின் தயாரிப்புக்கு நிதி உதவி அளித்த அன்புச் செழியன் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice