Home One Line P2 கொரொனாவைரஸ், ஆர்ப்பாட்டங்களால் 280 மில்லியன் இழப்பை எதிர்நோக்கும் டிஸ்னிலேண்ட்

கொரொனாவைரஸ், ஆர்ப்பாட்டங்களால் 280 மில்லியன் இழப்பை எதிர்நோக்கும் டிஸ்னிலேண்ட்

967
0
SHARE
Ad

ஹாங்காங் – கொரனொவைரஸ் பாதிப்பால் சீனாவின் ஷங்காய் நகரிலும் ஹாங்காங்கிலும் உள்ள டிஸ்னிலேண்ட் உல்லாச மையங்கள் மூடப்பட்டிருப்பதால், டிஸ்னி நிறுவனம் சுமார் 280 மில்லியன் டாலர் இழப்பீட்டை எதிர்நோக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஹாங்காங்கில் தொடர்ந்து மக்கள் போராட்டங்களாலும் அந்நாட்டிலுள்ள டிஸ்னிலேண்ட் மையத்திற்கு சுற்றுப் பயணிகள் வருவது வெகுவாகக் குறைந்துள்ளது.

இதன் காரணங்களால், டிஸ்னியின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்படும் எனவும், மார்ச் மாதம் முடியும் முதல் காலாண்டில் அதிக இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் இந்த இழப்புகள் ஆண்டு இறுதியில் டிஸ்னியின் இலாபத்தையும், வருமானத்தையும் பாதிக்கும் என்றும் வணிக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.