
பெய்ஜிங்: கொரொனாவைரஸ் காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 563-ஆக உயர்ந்துள்ளது என்று சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு நிலவரப்படி, மொத்தம் 28,018 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3,694 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
73 கூடுதல் இறப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் நடந்துள்ளதாக அது குறிப்பிட்டது.
ஹூபேயில் மட்டும் 549 பேர் இறந்துள்ளதாகவும், இதுவரை மொத்தம் 19,665 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹூபே மாகாண சுகாதார குழு தெரிவித்துள்ளது.