Home One Line P2 கொரொனாவைரஸ்: பலியானவர்களின் எண்ணிக்கை 636-ஆக உயர்வு!

கொரொனாவைரஸ்: பலியானவர்களின் எண்ணிக்கை 636-ஆக உயர்வு!

551
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொரொனாவைரஸ் பாதிப்பால் கூடுதல் 73 மரணங்கள் நேற்று வெள்ளிக்கிழமையோடு (பிப்ரவரி 6) பதிவாகி மரண எண்ணிக்கையை 636-ஆக உயர்த்தியது.

மேலும், கூடுதலாக 3,143 பேர் கொரொனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இது சீனாவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 636 ஆகவும், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை 31,161-ஆகவும் உயர்த்தியுள்ளது என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, இந்த கிருமி குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர் லி வென்லியாங்கின் மரணம் பற்றிய செய்திகள் பரவலாக டுவிட்டர் மற்றும் முக நூல் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த கிருமி குறித்து அவர் எச்சரித்து காணொளி ஒன்றை வெளியிட்ட பிறகு சீன அரசாங்கத்தால் அவர் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.