Home One Line P2 ‘பிகில்’ படத்திற்கு நிதிஉதவி அளித்தவரிடமிருந்து 770 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது!

‘பிகில்’ படத்திற்கு நிதிஉதவி அளித்தவரிடமிருந்து 770 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது!

795
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் பிப்ரவரி 5-ஆம் தேதி நடிகர் விஜய், “பிகில்” படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் நிதிஉதவி அளித்தவர் என நான்கு முக்கியமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் தொடங்கிய சோதனையில், அப்படத்தின் நிதி உதவியாளருக்கு சொந்தமான 770 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் சென்னை மற்றும் மதுரையில் இரசகசிய இடங்களில் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக எண்ணிக்கையில் சொத்து ஆவணங்கள், அடமானப் பத்திரங்கள், காசோலைகள் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணையின் போது 3000 மில்லியன் ரூபாய் வரையிலான வருமானம் மறைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறைத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர் சில படங்களை தயாரித்திருப்பதுடன், பல திரையரங்குகளை நடத்தி வருவதுடன். அவரது அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்து வருவதாக அது தெரிவித்துள்ளது.