Home One Line P2 கொரொனாவைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 86 பேர்கள் மரணம் – 27 நாடுகளில் 34,400...

கொரொனாவைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 86 பேர்கள் மரணம் – 27 நாடுகளில் 34,400 பேர்கள் பாதிப்பு

758
0
SHARE
Ad

பெய்ஜிங் – நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) ஒரே நாளில் சீனாவில் மட்டும் 86 பேர்கள் கொரொனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்திருப்பதைத் தொடர்ந்து அந்த நோயின் தாக்கம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

இதுவரையில் உலகம் முழுவதிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 724 பேர்களாக உயர்ந்துள்ளது. இவர்களில் இருவர் மட்டுமே மற்ற நாடுகளில் இறந்தவர்கள், மற்றவர்கள் அனைவரும் சீனாவில் இறந்திருக்கிறார்கள்.

27-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரொனாவைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,400-ஐ தாண்டியுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் வுஹானில் இறந்தவர்களில் வியாழக்கிழமை இறந்த 60 வயது அமெரிக்கர் ஒருவரும் அடங்குவார். சீனாவில் கொரொனா வைரஸ் தொற்றால் இறந்த முதல் வெளிநாட்டவர் இவர் ஆவார்.

ஜப்பானும் தனது நாட்டைச் சேர்ந்த ஒருவர் வுஹானில் மரணமடைந்தார் என அறிவித்திருக்கிறது.

இதற்கிடையில் மலேசியாவில் கொரொனாவைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.