Home One Line P2 விஜய்யின் “மாஸ்டர்” படப்பிடிப்பில் பாஜகவினர் மறியல் – செல்வமணி கண்டனம்

விஜய்யின் “மாஸ்டர்” படப்பிடிப்பில் பாஜகவினர் மறியல் – செல்வமணி கண்டனம்

798
0
SHARE
Ad

சென்னை – கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் நடிகர் விஜய், “பிகில்” படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் நிதிஉதவி அளித்தவர் என பல இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி இலாகாவின் அதிரடி சோதனை நடவடிக்கைகளில் 770 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 3000 மில்லியன் ரூபாய்க்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

எனினும், விஜய் வீட்டில் இருந்து எந்தவித பணமும் கைப்பற்றப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் நடந்து வரும் “மாஸ்டர்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் விஜய் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது தவறு என்றும் எனவே படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பாஜகவினர் சிலர் அப்போது மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விஜய் இரசிகர்கள் சிலரும் அந்த மறியலைத் தடுக்க அங்கு குவியத் தொடங்கியதால் பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழ் நாட்டில் படப்பிடிப்பை நடத்த முன்வந்திருக்கும் விஜய்க்கு எதிராக மறியலில் ஈடுபடுவதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும் தவறு என திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தில் தலைவரும் இயக்குநருமான செல்வமணி தெரிவித்துள்ளார்.