பெய்ஜிங்: கொரொனாவைரஸ் தொடர்பாக 3,062 புதிய வழக்குகளையும் 97 கூடுதல் இறப்புகளையும் சீன தேசிய சுகாதார ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் ஹூபே மாகாணத்தில் இந்த மரண எண்ணிக்கைகள் பதிவாகி உள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, மொத்தம் 40,171 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் 908 பேர் இறந்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய ஹூபே மாகாணம் இன்று திங்களன்று 91 இறப்புகளைப் பதிவுசெய்தது. வுஹானில் 73 பேர் இறந்துள்ளனர்.
பிப்ரவரி 1 முதல், முதல் முறையாக சனிக்கிழமையன்று குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இந்த தொற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.