கோலாலம்பூர்: லோ டேக் ஜோ (ஜோ லோ), தாரெக் ஒபைட் மற்றும் பேட்ரிக் மஹோனி ஆகியோருக்கு எதிராக வழங்கப்பட்ட கைது ஆணைகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இண்டர்போலுக்கு தெரிவித்துள்ளதாக அதன் தலைவர் லத்தீபா கோயா தெரிவித்தார்.
69 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பந்தப்பட்ட 1எம்டிபி பணமோசடி வழக்குக்கு இம்மூன்று நபர்களும் தங்களை ஆஜர் படுத்தாததால் இந்த அறிவிப்பு செய்யப்பட்டதாக அது குறிப்பிட்டது.
“இது தற்போது விசாரணையில் இருக்கும் 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனலின் நிதியை மீட்பதற்கான ஒரு பகுதியாகும் …”
“இந்த விவரங்களை அணுகக்கூடியவர்களை நாங்கள் தண்டிக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
1எம்டிபி ஊழலுக்கு தலைமை தாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜோ லோவுக்கு எதிரான இரண்டாவது கைது ஆணை இதுவாகும்.
ஒபைட் மற்றும் மஹோனி ஆகியோர் பெட்ரோசவுதி இன்டர்நேஷனல் லிமிடெட் (பிஎஸ்ஐ) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் ஆவர்.