இது இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 36 நோய்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 45 நோய்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்ட விரிவாக்கத்தில் 55 வயது வரம்பு 65-ஆக உயர்த்தப்பட்டதாகவும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
இந்த திட்டம் எம்40 பிரிவினருக்கும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதாவது, ஆண்டு வருமானம் 100,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் குறைவாக உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக அரசு மருத்துவமனை, பல்கலைக்கழக மருத்துவ மருத்துவமனை மற்றும் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் 14 நாட்களுக்கு 4,000 ரிங்கிட்டும் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி 50 ரிங்கிட்டும் வழங்கப்படும்.
“இந்த திட்டத்தின் விரிவாக்கம் ஆண்டு இறுதிக்குள் சுமார் எட்டு மில்லியன் நபர்களுக்கு பயனளிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது,” என்று லிம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.