வாஷிங்டன்: இந்திய நடனக் குழுவான ‘வி அன்பீட்டபள்’ அமெரிக்கா காட் டேலண்ட்: டி சாம்பியன்ஸ் சீசன் 2-இல் பங்கெடுத்து இறுதி சுற்று வரையிலும் முன்னேறியுள்ளனர்.
அவர்களின் நடன அசைவுகள், சுழற்சிகள் நீதிபதிகள் மற்றும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற “மரண மாஸ்” என்ற பாடலுக்கு அவர்கள் நடனமாடி, பார்வையாளர்களிடமிருந்தும், நீதிபதிகள், சைமன் கோவல், ஹெய்டி க்ளம், ஹோவி மண்டேல் மற்றும் அலேஷா டிக்சன் ஆகியோரிடமிருந்தும் பெரும் உற்சாகத்தைப் பெற்றனர்.
அவர்களின் அசாதாரணமான சாகசங்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
நீதிபதிகள் மும்பையைச் சேர்ந்த அந்நடனக் குழுவுக்கு ஒரு நிலையான வரவேற்பை அளித்தனர்.
“எந்தவொரு திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியிலும் நடந்திராத மிகச் சிறந்த படைப்பு இது” என்று ஹோவி மண்டேல் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “நான் பார்த்த குழுக்களை விட உங்களுக்கு அதிக ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. நான் உங்கள் கண்களைப் பார்க்கிறேன், உங்கள் வாழ்க்கையில் உள்ள ஆபத்தைப் பார்க்கிறேன். உலகம் உங்களுக்குத் திறந்து விட்டது, உலகை எங்களுக்காக திறந்துவிட்டீர்கள். ” என்று அவர் கூறினார்.
“தூய்மையான பிரகாசத்தின் வண்ணமயமான படைப்பு” என்று நீதிபதி அலேஷா டிக்சன் அவர்களை பாராட்டினார்.
“நீங்கள் வழக்கமான ஆண்கள் , பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து குறிப்பிடத்தக்க ஒன்றைச் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு மிகக் குறைந்த நேரம் இருந்தாலும் கூட, ஆச்சரியமூட்டும் அளவிற்கு செய்துள்ளீர்கள்” என்று சைமன் கோவல் கூறினார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அவர்களின் நடனக் காணொளியைக் காணலாம்: