Home One Line P2 கொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு...

கொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம்!

782
0
SHARE
Ad
படம்: நன்றி ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: கொவிட்-19 தொற்று நோய் காரணமாக சீனாவில் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 1,483-ஆக உயர்ந்துள்ளதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை மட்டும், மேலும் 116 இறப்புகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் கூடுதல் 4,823 புதிய வழக்குகளை சீனா இன்று வெள்ளிக்கிழமை காலை அறிவித்தது.

இன்றுவரை, உலகளவில் இந்த தொற்றுநோய்க் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,486 ஆகும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், இன்று அதிகாலை ஜப்பானில் இந்நோய்க் காரணமாக முதல் இறப்பு சம்பவம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த தொற்றுநோய்க் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் தவறான ஆலோசனைகள் உட்பட “போலி செய்திகளின்” எழுச்சி, மேலும் மோசமடையச் செய்யலாம் என்று இன்று வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களின் பரவல் நோய் பரவுவதை எவ்வாறு பாதிக்கிறது என்ற பகுப்பாய்வில், பிரிட்டனின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் (யுஇஏ) போலி செய்திகளைப் பகிர்வதைத் தடுக்கும் எந்தவொரு வெற்றிகரமான முயற்சியும் உயிரைக் காப்பாற்ற உதவும் என்று கூறியுள்ளது.

“கொரொனாவைரஸைப் பொறுத்தவரை, வைரஸ் எவ்வாறு உருவானது, எதனால் ஏற்படுகிறது, அது எவ்வாறு பரவுகிறது என்பது பற்றி இணையத்தில் ஏராளமான ஊகங்கள், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகள் பரவி வருகின்றன” என்று யுஇஏ மருத்துவ பேராசிரியர் பால் ஹண்டர் கூறினார்.

“தவறான தகவல் என்பது மோசமான அறிவுரைகள் விரைவாக புழக்கத்தில் விடக்கூடும், மேலும் இது மனித நடத்தையை உடனே மாற்றுவதுடன், அதிக ஆபத்துக்களை உருவாக்கும்” என்று அவர் கூறினார்.