Home One Line P2 ‘காடன்’ : இயற்கையின் ஆழத்திற்குள் சென்றுள்ள ரானா டகுபதி!

‘காடன்’ : இயற்கையின் ஆழத்திற்குள் சென்றுள்ள ரானா டகுபதி!

917
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் பிரபு சாலமன் மீண்டும் பசுமை நிறைந்த ஒரு படத்தினை வழங்கி உள்ளார்.

‘மைனா’ திரைப்படத்திற்குப் பிறகு ‘கும்கி’ போன்ற வெற்றி திரைப்படங்களை வழங்கிய அவர் தற்போது நடிகர் ரானா டகுபதியை வைத்து ‘காடன்’ எனும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில், நடிகர் விஷ்ணு விஷாலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலமாக இயற்கையின் ஆழத்திற்குள் மீண்டும் துணிந்து சென்றுள்ளார் இயக்குனர்.

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டு இரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரானா டகுபதி சிறந்த ஒரு நடிப்பினை வழங்கி உள்ளதாகத் தெரிகிறது.

இந்த வணிக உலகில், விலங்குகள் மற்றும் பழங்குடியினருக்காக தங்கள் சொந்த இடங்களை காப்பாற்றிக் கொள்ள போராடும் காடுகளின் மனிதராக ‘காடன்’ ரானா டகுபதி வருகிறார்.

இத்திரைப்படத்தின் மூலமாக மீண்டும் பிரபு சாலமன் நிச்சயமாக இரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார் என்று நம்பப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: