Home Featured கலையுலகம் பிரபு சாலமனின் புதிய படம் ‘தொடரி’ – பெயர் குறித்து கவிஞர் மகுடேசுவரன் விளக்கம்!

பிரபு சாலமனின் புதிய படம் ‘தொடரி’ – பெயர் குறித்து கவிஞர் மகுடேசுவரன் விளக்கம்!

941
0
SHARE
Ad

Thodari-Movie-Posters-696x465கோலாலம்பூர் – தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கி வரும் புதிய படத்திற்கு ‘இரயில்’ என்று தான் முதலில் பெயரிட்டிருந்தனர். இந்நிலையில் அண்மையில் அப்பெயரை மாற்றி ‘தொடரி’ என்று அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெயர் குறித்து கவிஞர் மகுடேஸ்வரன் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

1917477_1038022362902919_5488591120521508742_n“தொடரி என்னும் பெயர் திரைப்படமொன்றுக்கு வைக்கப்பட்டுள்ளதாம். இப்பெயர் சரியா என்று முன்னணி இதழிலிருந்து அழைத்துக் கேட்டார்கள். தொடர் என்பது வினைவேர். தொடர்க என்னும் ஏவல் பொருள் தருவது. இவ்வினைவேருடன் இ என்னும் விகுதி சேர்த்தால் தொடர் + இ = தொடரி என்னும் விகுதிபெற்ற தொழிற்பெயர் கிடைக்கும். தொடர்கின்றமையால் கிடைக்கின்ற/அமைகின்ற எவ்வொன்றுக்கும் இப்பெயர்ச்சொல்லைப் பொருத்தலாம். இச்சொல்லைக் கேட்டதும் சொற்பொருள் அடிப்படையில் எனக்குத் தோன்றுவது இது. எடுத்துக்காட்டாக, அகழ் என்ற வினைவேர் உள்ளது. அகழ் என்றால் தோண்டு என்று பொருள். நிலத்தைத் தோண்டுவது அகழ்வது ஆகும். ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’ என்னும் உவமைத்தொடரை அறிவோம். அகழ்ந்து பெறுவது அகழி. அகழ்+இ. கோட்டைகளுக்குக் காப்பாக சுற்றுக்குழி தோண்டி அமைப்பது அகழி. அதுபோல் தொடரி. இருப்பூர்திக்கான பெயராக அவ்வியக்குநர் இப்பெயரைத் தேர்வு செய்தாராம். நல்ல முயற்சிதான். இப்படித்தான் புதுச்சொற்கள் எல்லாத் தரப்பிலிருந்தும் ஆக்கி நிறுவப்படவேண்டும் என்று சொன்னேன்.” இவ்வாறு கவிஞர் மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.