Home Featured கலையுலகம் நடிகர் சங்கத்தில் எந்த பிளவும் இல்லை – விஷால் தகவல்!

நடிகர் சங்கத்தில் எந்த பிளவும் இல்லை – விஷால் தகவல்!

607
0
SHARE
Ad

vishal-imageசென்னை – நடிகர் சங்கத்தில் எந்த பிளவு இல்லை என்றும், அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்றும் நடிகர் விஷால் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர்.

நாசர் தலைவரானார். விஷால் பொதுச்செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்வானார்கள்.

24 பேரை கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு விஷால் அணியை சேர்ந்த ராஜேஷ், பிரசன்னா, ரமணா, உதயா, பூச்சி முருகன், ஜுனியர் பாலையா, கோவை சரளா, குட்டி பத்மினி, சங்கீதா, சுகன்யா உள்பட 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டும் முயற்சியில் புதிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் பொதுக்குழுவையும் சென்னையில் கூட்டினார்கள். இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் திடீரென்று பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.

பொதுக்குழுவிலும் இந்த மோதல் எதிரொலித்ததாக கூறப்பட்டது. நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதனை நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் நேற்று மறுத்தார்.

டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி விஷால் கூறும்போது:- “நடிகர் சங்கத்தில் பிளவா? அதில் பிளவை ஏற்படுத்த முடியும் என்று என்னிடம் யாராவது சவால் விட தயாரா? நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரே குடும்பமாக செயல்படுகிறோம்” என்று பிளவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஷால்.