பிரசல்ஸ் – 34 உயிர்களை பலிவாங்கிய தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று பிரசல்ஸ் நகரை சென்றடைந்தார்.
பத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களும் காயமடைந்துள்ள இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் உள்பட இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.
இந் நிலையில், மாஸ்கோ நகரில் இருந்து பிரசல்ஸ் நகரை சென்றடைந்த ஜான் கெர்ரி, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல், வெளியுறவுத்துறை அமைச்சர் டிடியர் ரெய்ன்டர்ஸ், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். தேவைப்பட்டால் இந்த தாக்குதல் தொடர்பான புலன் விசாரணையில் அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.