Home Featured தமிழ் நாடு ரூ. 500 கோடி குற்றச்சாட்டு: வைகோவுக்கு கருணாநிதி மனு!

ரூ. 500 கோடி குற்றச்சாட்டு: வைகோவுக்கு கருணாநிதி மனு!

693
0
SHARE
Ad

karunanidhi-vaiko(c)சென்னை – தேமுதிகக்கு ரூ. 500 கோடி பணம், 80 சீட்டுகள் தருவதாக திமுக தலைவர் கருணாநிதி பேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து, அவருக்கு எதிராக திமுக  தலைவர் கருணாநிதி விளக்கம் கேட்டு மனு அனுப்பியுள்ளது.

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, ” தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. தே.மு.தி.க.வுக்கு 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும் தி.மு.க. தருவதற்கு முன்வந்தது என்ற செய்தி ஒரு நாளிழில் வெளிவந்துள்ளது.

அது உண்மையுமாகும். நான் கேள்விபட்டது, தி.மு.க. சார்பாக 500 கோடி ரூபாயும், 80 சீட்டும் தருவதாக கலைஞர் ஒரு துண்டு சீட்டில் எழுதியே கொடுத்து அனுப்பியதாகவும், அதை, உதாசினமாக தூக்கி எறிந்துவிட்டு, எதற்கு போன தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க மக்களிடம் சென்றாரோ, அதே ஊழல் கூட்டம் திரும்ப ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்று விஜயகாந்த் முடிவெடுத்து, அந்த 500 கோடி என் கால் தூசுக்கு சமம் என்று தூக்கி போட்டிருக்கிறார்” எனக் கூறி இருந்தார் வைகோ.

#TamilSchoolmychoice

ஆனால் வைகோவின் இந்த குற்றச்சாட்டை மறுத்த திமுக பொருளாளர் ஸ்டாலின், ”வைகோவின் குற்றச்சாட்டு அபாண்டமானது. அதற்கு சட்டப்படி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார். இந்நிலையில் மேற்கூறிய குற்றச்சாட்டைக் கூறிய வைகோவுக்கு,  திமுக தலைவர் கருணாநிதி வழக்கறிஞர் மூலம் மனு அனுப்பினார்.

அதில், திமுக மீது வைகோ அவதூறான கருத்துகளை பரப்புவதாகவும், அதற்கு சட்டப்படி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், திமுக மீது வைகோ கூறிய குற்றச்சாட்டை ஏழு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ கூறுகையில், ”திமுக மனு அனுப்பியதை சட்டரீதியா எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தை திரும்பப் பெறப்போவதில்லை. தேமுதிக பேரம் பேசவில்லை. திமுகதான் பேரம் பேசியது” என்றார் வைகோ.