Home Featured வணிகம் இந்தியா 2 மில்லியன் டன் சீனியை ஏற்றுமதி செய்யும்!

இந்தியா 2 மில்லியன் டன் சீனியை ஏற்றுமதி செய்யும்!

924
0
SHARE
Ad

sugar

 

மும்பை – உலகின் இரண்டாவது பெரிய சீனி உற்பத்தி நாடான இந்தியா எதிர்வரும் ஆண்டில் 2 மில்லியன் டன் சீனியை ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்த ஓராண்டுக்குள் 1.9 மில்லியன் முதல் 2 மில்லியன் டன் வரையிலான சீனியை ஏற்றுமதி செய்ய உத்தேசம் கொண்டுள்ள இந்தியா, இதுவரைக்கும் 1.4 மில்லியன் டன் சீனிக்கான ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்றுவிட்டன என்றும் செப்டம்பருக்கும் மேலும் 5 இலட்சம் முதல் 6 இலட்சம் டன் வரையிலான சீனி மேலும் ஏற்றுமதி செய்யப்படலாம் என்றும் சீனி உற்பத்தி ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியாவின் சீனி உற்பத்தி ஆலைகள் இதுவரை 22.13 மில்லியன் டன் சீனியை உற்பத்தி செய்துள்ளன. கடந்த ஆண்டில் 22.16 மில்லியன் டன் சீனியை இந்திய ஆலைகள் உற்பத்தி செய்தன.

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அண்மையில் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக கரும்பு உற்பத்தி வெகுவாகக் குறைந்து அதனால்  ஏறத்தாழ 189 கரும்பு ஆலைகள் மூடப்படும் நிலைமை ஏற்பட்டது. இவற்றில் 91 ஆலைகள் இந்தியாவின் முன்னணி சீனி உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.