கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் குறித்து பிரதமரிடம் கலந்தாலோசித்துள்ளார்.
நேற்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்தித்த அவர் நாட்டில் கருத்துச் சுதந்திரம் குறித்தும், அன்வாரின் நிலை குறித்து கலந்தாலோசித்துள்ளார்.
இந்தத் தகவலை கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
“கருத்துச் சுதந்திரம் குறித்தும், அன்வார் இப்ராகிமின் நிலை குறித்தும் பிரதமரிடம் எனது கவலைகளை முன் வைத்தேன் (இருதரப்புப் பேச்சுவார்த்தையில்)” என்று தெரிவித்துள்ளார்.