கோலாலம்பூர் – ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற ‘பாகுபலி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது.
அதில் ஒரு மாதிரிக்காக இன்று தனது பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ராணா. அதைப் பார்த்த பலரும் ஆச்சரியமடைந்து வருகின்றனர். அவ்வளவு பிரம்மாண்டமான அளவில் அவரது உடற்கட்டு காணப்படுகின்றது.
இதனிடையே, ராணாவே இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறார் என்றால் பாகுபலி எவ்வளவு பிரம்மாண்டமாகக் காணப்படுவார் என இப்போதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
Comments