Home Featured கலையுலகம் மலேசியப் படமான ‘ரேதா’ ஆஸ்காருக்குப் பரிந்துரை!

மலேசியப் படமான ‘ரேதா’ ஆஸ்காருக்குப் பரிந்துரை!

1007
0
SHARE
Ad

redhaகோலாலம்பூர் – வரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள, 89-வது ஆஸ்கார் விருது விழாவில், சிறந்த வேற்று மொழித் திரைப்படப் பிரிவில் மலேசியா சார்பில் போட்டியிட, ‘ரேதா’ என்ற திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (ஃபினாஸ்) (National Film Development Corporation Malaysia – FINAS), அனைத்துலக திரைப்பட விழாக் குழுவினருடன் இணைந்து, ‘ரேதா’ திரைப்படத்தை ஆஸ்காருக்குப் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை ஃபினாஸ் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஜூலை 3-ம் தேதி, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவில் (World Premieres Film Festival – WPFF)  ‘ரேதா’, இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

இத்திரைப்படத்தில் ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளான குழந்தையை வளர்க்கப் போராடும் கதாப்பாத்திரத்தில் நடித்த  நடிகை ஜூன் லோஜோங்கிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உலகளாவிய அளவில் இருக்கும் சமூகம் சார்ந்த விவகாரம் குறித்துப் படம் பேசுவதால், அதற்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.