Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா பேசுவது போலான போலி குரல்பதிவு – வாட்சாப்பில் பரவுகிறது!

ஜெயலலிதா பேசுவது போலான போலி குரல்பதிவு – வாட்சாப்பில் பரவுகிறது!

756
0
SHARE
Ad

jayaசென்னை – அப்போலோவில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது உடல்நலம் பற்றி பேசுவது போலான குரல்பதிவு ஒன்று வாட்சாப்பில் நேற்று திங்கட்கிழமை முதல் பரவி வருகின்றது.

ஆனால் அந்த குரல்பதிவு உண்மை இல்லை என்றும், பின்னணி குரல் பேசுபவர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.

அந்த குரல்பதிவில், ஜெயலலிதா தனக்காகப் பிரார்த்தனை செய்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி கூறுவது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice