Home Featured தமிழ் நாடு சபரிமலை நடைதிறப்பு நாட்கள் – திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு!

சபரிமலை நடைதிறப்பு நாட்கள் – திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு!

1119
0
SHARE
Ad

ayyappan-songsசபரிமலை – வரும் 2017-ம் ஆண்டிற்கான சபரிமலை நடைதிறப்பு நாட்கள் குறித்த முழு விவரங்களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன் படி, மொத்தம் 137 நாட்கள் நடை திறக்கப்படவுள்ளது.

ஜனவரி: மகரவிளக்கு கால பூஜைக்காக, 2016 டிச., 30 மாலை நடை திறக்கும்; 2017 ஜன., 20 காலை, 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஜன., 14ல் மகரவிளக்கு பெருவிழா.

பிப்ரவரி: மாசி மாத பூஜைகளுக்காக, பிப்., 12 மாலை திறப்பு; 17 இரவு அடைப்பு

#TamilSchoolmychoice

மார்ச்: பங்குனி மாத பூஜைகளுக்காக, மார்ச், 14 மாலை திறப்பு; 19 இரவு அடைப்பு. பங்குனி உத்திர திருவிழாவுக்காக மார்ச், 30 மாலை திறப்பு; மார்ச், 31 காலை கொடியேற்று.

ஏப்ரல்: பங்குனி உத்திர திருவிழா ஆராட்டு முடிந்து, ஏப்., 9ம் தேதி இரவு நடை அடைப்பு.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ விழாவுக்காக, ஏப்., 10 மாலை திறப்பு; ஏப்., 18 இரவு அடைப்பு. விஷூ கனி தரிசனம், ஏப்., 14ல் நடைபெறும்.

மே: வைகாசி மாத பூஜைகளுக்காக, மே, 14 மாலை திறப்பு; மே, 19 இரவு அடைப்பு.

ஜூன்: பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக, ஜூன், 3ம் தேதி மாலை திறப்பு; 4ம் தேதி இரவு அடைப்பு. ஆனி மாத பூஜைகளுக்காக, ஜூன், 14 மாலை திறப்பு; 19 இரவு அடைப்பு.

ஜூலை: ஆடி மாத பூஜைகளுக்காக,ஜூலை, 16 மாலை திறப்பு; 21 இரவு அடைப்பு.

ஆகஸ்ட்: ஆவணி மாத பூஜைகளுக்காக, ஜூலை, 16 மாலை திறப்பு; 21 இரவு அடைப்பு.

செப்டம்பர்: திருவோண பூஜைகளுக்காக, செப்., 2ம் தேதி மாலை திறப்பு, 6ம் தேதி இரவு அடைப்பு. புரட்டாசி மாத பூஜைகளுக்காக, செப்., 16 மாலை திறப்பு; 21 இரவு அடைப்பு.

அக்டோபர்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக அக்., 16 மாலை திறப்பு; 21 இரவு அடைப்பு. சித்திரை ஆட்ட திருநாள் பூஜை அக்.,18ல் நடைபெறும்.

நவம்பர்: மண்ட கால பூஜைகளுக்காக நவ., 15 மாலை நடை திறப்பு.

டிசம்பர்: நவ.,15ல் திறக்கும் நடை டிச., 26 இரவு நடை அடைப்பு. டிச., 26 மண்டலபூஜை. 2018 மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30 மாலை திறப்பு.

வரும், 2017ல் மொத்தம், 137 நாட்கள் நடை திறந்திருக்கும்.

இதில் 123 நாட்கள் காலை முதல் இரவு வரையிலும் திறந்திருக்கும். 13 நாட்கள் அதாவது நடை திறக்கும் நாட்களில் மாலை, 5:00 மணி முதல், இரவு, 10:00மணி வரை நடை திறந்திருக்கும். அன்று பூஜைகள் எதுவும் கிடையாது.

அதே போல் ஜன., 2ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு திறக்கும் நடை, காலை, 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் அடைக்கப்படும்.

வரும், 2018 ஜன.,14 மகரவிளக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.