புது டில்லி: ஐப்பசி மாத பூசைகளை முன்னிட்டு சபரி மலையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் நடை திறக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 250 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் கொவிட்19 பாதிப்புக் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்டளவில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொவிட்19 தொற்றுக் காரணமாக ஏழு மாதங்களாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படும். அக்டோபர் 21 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.