Home One Line P2 பிரான்சில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

754
0
SHARE
Ad

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டில் கொவிட்19 தொற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் அந்நாட்டில் இரண்டாம் அலை தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றைக் கட்டுப்படுத்தத் தடுக்கும் நடவடிக்கையாக பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரான்ஸில் கொவிட்19 தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது என்று கூறினார்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 10-ஆம் தேதி அதிகமாக ஒரேநாளில் 27,000 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 756,472 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 32,942 பேர் பலியாகியுள்ளனர்.

#TamilSchoolmychoice

பிரான்சில் வரும் சனிக்கிழமை முதல் அடுத்த நான்கு வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.