Home Featured உலகம் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச ஜிக்கா பரிசோதனை – தாய்லாந்து முடிவு!

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச ஜிக்கா பரிசோதனை – தாய்லாந்து முடிவு!

738
0
SHARE
Ad

Zika virus longபேங்காக் – கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, தாய்லாந்தில் இரு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தங்கள் நாட்டில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் இலவசமாக ஜிக்கா வைரஸ் பரிசோதனை செய்ய தாய் சுகாதார அமைச்சு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து தாய் சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சோபோன் மெக்தோன் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 1,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஜிக்கா பரிசோதனை செய்ய தாய் மதிப்பில் 2,000 பட் (அமெரிக்க மதிப்பில் 58 டாலர்) செலவாகிறது. ஆனால் அப்பரிசோதனைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் சோபோன் மெக்தான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice