Home One Line P2 சபரிமலை : மண்டல பூசைக்காக நடை திறக்கப்படுகிறது, 10,000 காவல் துறையினர் குவிப்பு!

சபரிமலை : மண்டல பூசைக்காக நடை திறக்கப்படுகிறது, 10,000 காவல் துறையினர் குவிப்பு!

1106
0
SHARE
Ad

திருவனந்தபுரம்: கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கு இந்தியா அளவில் பெரும் எதிர்ப்பும் போராட்டங்களும் நடந்தன. இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கினை மாற்றி உத்தரவிட்டது.

மேலும், தற்போதைக்கு, பெண்கள் கோயிலுக்குள் செல்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்த பரபரப்பான சூழலில், இன்று சனிக்கிழமை (நவம்பர் 16) உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் 10,000 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.