Home Featured இந்தியா காவிரி விவகாரம்: பிரதமர் அலுவலகம் முன்பு அதிமுக எம்பிக்கள் போராட்டம்!

காவிரி விவகாரம்: பிரதமர் அலுவலகம் முன்பு அதிமுக எம்பிக்கள் போராட்டம்!

838
0
SHARE
Ad

delhiபுது டெல்லி – காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கும் தற்போதய நிலைப்பாடு தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று பிரதமரை சந்தித்துப் பேச அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற அவர்கள், பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அங்கு பிரதமர் இல்லாத காரணத்தால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.